சர்வதேச நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பின் மானியங்கள்
December 3 , 2024 20 days 59 0
நோய்க்கிருமி மரபணு கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக என்று உலக சுகாதார அமைப்பானது பத்து திட்டங்களை அறிவித்துள்ளது.
நோய்க்கிருமி மரபணுக் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக மேலே குறிப்பிட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் டாலர் நிதியைப் பெறும்.
இந்த நிதியுதவி முன்னெடுப்பானது, சர்வதேச நோய்க்கிருமிக் கண்காணிப்பு வலை அமைப்பினால் (IPSN) நிறுவப்பட்டது.
மரபணு நோய்க்கிருமிப் பகுப்பாய்வில் தனது திறன்களை மேம்படுத்தச் செய்வதில் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள பகுதிகளில் உள்ள பங்குதாரர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.