சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றக் கூட்டமைப்பு - பிஷ்கெக், கிர்கிஸ்தான்
September 10 , 2017 2633 days 934 0
சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றக் கூட்டமைப்பு கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடைபெற்றது.
இக்கூட்டமைப்பின் நோக்கமானது, 2020ஆம் ஆண்டிற்குள் 20 பனிச்சிறுத்தை வாழும் இடங்களை பாதுகாப்பதாகும்.
பனிச்சிறுத்தையானது, IUCN சிவப்பு தரவு பட்டியலில் (Red Data List) ‘ஆபத்தான’ (Endangered) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், CITES முதலாம் தொகுப்பில் (Appendix-I) சேர்கப்பட்டுள்ளது. இதனால் பனிச்சிறுத்தையின் உடல் பாகங்கள் சர்வதேச சந்தையில் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
பனிச்சிறுத்தை, ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 12 நாடுகளில் வாழிடம் கொண்டுள்ளது.
தஜிகிஸ்தானை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.