10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவானது (TNIBF) பொள்ளாச்சி நகரத்தில் சமீபத்தில் நடத்தப் பட்டது.
TNIBF ஆனது குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநில சுற்றுலாத் துறையினால் நடத்தப்படுகிறது.
இது நாட்டின் ஒரே வருடாந்திர வெங்காற்று மிதவை/பலூன் விழாவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இந்த விழாவில் ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய சுமார் எட்டிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட வெங்காற்று மிதவைகள் இடம் பெறுகின்றன.