December 15 , 2020
1499 days
688
- 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2020 ஆம் ஆண்டின் சர்வதேச பாரதி திருவிழாவில் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் என்பவருக்கு 2020 ஆம் ஆண்டின் பாரதி விருதை காணொலி வாயிலாக வழங்கினார்.
- விஸ்வநாதன் அவர்கள் சுப்பிரமணிய பாரதி குறித்த ஒரு மிகப்பெரிய சுருக்கத்தை கால வரிசைப் படி எழுதியுள்ளார்.
- இந்த விழாவானது சென்னையில் உள்ள வானவில் கலாச்சார மையத்தினால் நடத்தப் பட்டது.
- இது தேசியக் கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப்பட்டது.
- சுப்பிரமணிய பாரதி அவர்கள் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்தார்.
Post Views:
688