ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச புவியியல் தேனீ இளையோர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பை இந்திய-அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர் ஏவி கோயல் வென்றார்.
14 வயதுடைய ஏவி கலிபோர்னியாவின் சான்ஜோஸ்-ல் சில்வர் க்ரீக் உயர்நிலைப் பள்ளியில் 10 வது நிலையில் உள்ளார்.
10 பதக்கப் போட்டிகளில் ஏழு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று மொத்த பதக்கப்பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
மேலும் அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான கீழ்க்காணும் மூன்று நிகழ்வுகளிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
சர்வதேச புவியியல் தேர்வு
சர்வதேச புவியியல் தேனீ
சர்வதேச புவியியல் கண்காட்சி
2016-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் போட்டியானது சர்வதேச கல்விப் போட்டி என்ற அமைப்பால் நடத்தப்பட்டு சர்வதேச வரலாறு தேனீ மற்றும் கிண்ணம் (International History Bee and Bowl) என்ற அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.