TNPSC Thervupettagam

சர்வதேச புவியியல் தேனீ உலக சாம்பியன்ஷிப்

August 13 , 2018 2298 days 679 0
  • ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற சர்வதேச புவியியல் தேனீ இளையோர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பை இந்திய-அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர் ஏவி கோயல் வென்றார்.
  • 14 வயதுடைய ஏவி கலிபோர்னியாவின் சான்ஜோஸ்-ல் சில்வர் க்ரீக் உயர்நிலைப் பள்ளியில் 10 வது நிலையில் உள்ளார்.
  • 10 பதக்கப் போட்டிகளில் ஏழு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று மொத்த பதக்கப்பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
  • மேலும் அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான கீழ்க்காணும் மூன்று நிகழ்வுகளிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
    • சர்வதேச புவியியல் தேர்வு
    • சர்வதேச புவியியல் தேனீ
    • சர்வதேச புவியியல் கண்காட்சி
  • 2016-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் போட்டியானது சர்வதேச கல்விப் போட்டி என்ற அமைப்பால்  நடத்தப்பட்டு சர்வதேச வரலாறு தேனீ மற்றும் கிண்ணம் (International History Bee and Bowl) என்ற அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்