ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 அன்று சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெண்களுக்கான உரிமைகள் இயக்கத்தில் இது ஒரு மையப் புள்ளியாகும்.
1909 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று நியூயார்க்கில் பெண்கள் தினத்தை அமெரிக்காவின் சமதர்மக் கட்சி ஒருங்கிணைத்தது.
1917 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று சோவியத் இரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர். அங்கு மார்ச் 08 ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாகும்.
இந்தத் தினமானது 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை சமதர்ம இயக்கம் மற்றும் பொதுவுடைமைக் கட்சியினால் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்திற்கான கருத்துருவானது, “சமமாக சிந்தனை செய், புத்திசாலித்தனமாக கட்டமை, மாற்றத்திற்காக புதுமையைப் படை” என்பதாகும்.