TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

October 12 , 2017 2472 days 893 0
  • சர்வதேச பெண் குழந்தைகள் தின அனுசரிப்பின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து நடத்திய “பெண்களை மேம்படுத்துவதில் விளையாட்டுத் துறையின் பங்கு” எனும் தலைப்பின் மீதான குழு விவாத நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த குழு விவாதத்தில் யூனிப்செப்பின் நல்லெண்ண தூதரான சச்சின் டெண்டுல்கர் , இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் போன்றோர் பங்கேற்றனர்.
  • “புதிய இந்தியாவின் மகள்கள் – பேட்டி பச்சாவோ – பேட்டி படாவோ வாரம்” என்ற தேசிய வாரத்தினுடைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனுசரிக்கப்பட்ட சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று இந்த குழு விவாதம் நடைபெற்றது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
  • 2012 ஆம் ஆண்து முதல் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகம் முழுவதும், பெண்கள் எதிர்கொள்ளும் தனித்தன்மையுடைய சவால்களையும், பெண்களின் உரிமைகளையும் அங்கீகரிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகளின் போது, நெருக்கடிகளுக்கு முன்னும், பின்னும் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களின் மேல் உலக கவனத்தையும், நடவடிக்கைகளையும் ஊக்குவிக்க யூனிசெப் அமைப்பால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ வாரம் (9th to 14th Oct)
  • அக்டோபர் 9 முதல் 14 வரையிலான நாட்களை பேட்டி பச்சாசோ பேட்டி படாவோ வாரமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடிவருகிறது.
  • சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (அக்டோபர் 11) ஐ முன்னிட்டு இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
  • இநத் நிகழ்ச்சியின் கருத்துரு - “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ வாரம் – புதிய இந்தியாவின் மகள்கள்”

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்