TNPSC Thervupettagam

சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் - பிப்ரவரி 06

February 11 , 2023 657 days 235 0
  • இதற்காக, 1997 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
  • பெண் பிறப்புறுப்பு சிதைவு / துண்டித்தல் தொடர்பான கூட்டுத் திட்டமானது, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றால் 2007 ஆம் ஆண்டில் அந்த நடைமுறையைக் கைவிடுவதை துரிதப் படுத்துவதற்காக தொடங்கப் பட்டது.
  • இந்தத் தினமானது சிறுமிகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகளை மீறும் வகையிலான பெண் பிறப்புறுப்பு சிதைவு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "சமூக மற்றும் பாலின நெறிமுறைகளை மாற்றி அமைப்பதற்காக ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் இணைந்து பெண் பிறப்புறுப்பு சிதைவு நடைமுறையினை முடிவுக்குக் கொண்டு வருதல்" என்பதாகும்.
  • இந்த நடைமுறையானது பெரும்பாலும் ஆப்பிரிக்காவில், குறிப்பாக வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்