TNPSC Thervupettagam

சர்வதேச பெரும் பூனை இனங்கள் கூட்டணி 2025

February 7 , 2025 16 days 63 0
  • சர்வதேச பெரும் பூனை இனங்கள் கூட்டணி (IBCA) ஆனது அதிகாரப்பூர்வமாக ஓர் ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் அரசுகளுக்கிடையேயானப் பெரும் அமைப்பாக நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இது ஜனவரி 23 ஆம் தேதியன்று முழுமையாகச் செயல்படும் சர்வதேசச் சட்டப்பூர்வ நிறுவனமாக மாறியது.
  • இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான ஒரு வைப்புச் சேவை அமைப்பாக வெளி விவகாரங்கள் துறை அமைச்சகம் (MEA) செயல்படும்.
  • சமீபத்தில் நிகரகுவா குடியரசு, எஸ்வதினி பேரரசு, இந்தியக் குடியரசு, சோமாலியா கூட்டாட்சி குடியரசு மற்றும் லைபீரியா குடியரசு ஆகிய ஐந்து நாடுகள் தங்கள் ஒப்புதல் ஆவணங்களை இதில் சமர்ப்பித்துள்ளதையடுத்து அவை IBCA கூட்டணியின் ஸ்தாபன உறுப்பினர்களாக மாற்றியுள்ளன.
  • IBCA ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் தேதியன்று இந்தியப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஒரு நிகழ்வின் போது இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பின் மிகவும் முக்கிய நோக்கமானது புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிவிங்கிப் புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு முக்கியப் பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதாகும்.
  • தற்போது வரையில், இந்தியா உட்பட 27 நாடுகள் இந்தக் கூட்டணியில் சேர ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்