சர்வதேச பொது விமானப் போக்குவரத்து தினம் - டிசம்பர் 07
December 11 , 2024 23 days 64 0
பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதில் பொது விமானப் போக்குவரத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பினால் (ICAO) நிறுவப் பட்டது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய இணைப்பை ஊக்குவிக்கும் சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்துக்கான 1944 ஆம் ஆண்டு உடன்படிக்கையினை இந்தத் தினம் கௌரவிக்கிறது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் சர்வதேச பொது விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 80வது ஆண்டு நிறைவையும் இந்தத் தினம் குறிக்கிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவானது மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக திகழ்கிறது.