TNPSC Thervupettagam

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 08

March 12 , 2024 258 days 217 0
  • பெண்களின் பல சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • பாலினச் சமத்துவத்தை விரைவுப்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைக்கான ஒரு அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பெண்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ மற்றும் இந்தத் தினத்திற்கான பிரச்சாரத்தின் கருத்துரு, ‘உள்ளடக்கத்தினை ஊக்குவித்தல்’ என்பது ஆகும்.
  • 1910 ஆம் ஆண்டில், கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் என்பவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்மொழிந்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 1975 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது.
  • 1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாள் குறித்த அறிவிப்பினை வெளியிடுமாறு உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்