ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) இந்த சிறப்பு தினத்தினை முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் அறிவித்தது.
எல்லா இடங்களிலும் உள்ள மக்களால் பகிரப்படும் உலகளாவிய நோக்கங்கள் மற்றும் விருப்பங்களாக மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
எளிய மற்றும் தினசரி மகிழ்ச்சிப் பழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கு என்று மக்களை ஊக்குவிப்பதன் மூலம் உலகத்தைக் கனிவான மற்றும் மிக மகிழ்ச்சியான இடமாக மாற்றுவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "மகிழ்ச்சிக்காக மீண்டும் இணைதல்: நெகிழ்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குதல்" என்பதாகும்.