TNPSC Thervupettagam

சர்வதேச மதச் சுதந்திரச் சட்டம்

December 13 , 2020 1365 days 564 0
  • அமெரிக்க உள்துறையானது சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்திற்கு இணங்கும் வகையில் பல்வேறு பட்டியலில் பல்வேறு நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • அதில் உள்ள இதர 8 நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை மதச் சுதந்திர மீறலுக்கான குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் (CPC - Country of Particular Concern) என்ற பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன.
  • மியான்மர், எரித்திரியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அந்த இதர நாடுகளாகும்.
  • அமெரிக்க உள்துறையானது இந்தியா, ரஷ்யா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றை CPC ஆக வகைப்படுத்தும் யுஎஸ்சிஐஆர்எப் (USCIRF) என்ற அமைப்பின்  பரிந்துரையை ஏற்றுக்  கொள்ள வில்லை.
  • கோமோரோஸ், கியூபா, நிகரகுவா மற்றும் ரஷ்யா ஆகியவை மதச் சுதந்திரத்தின் மீது தீவிரமான விதிமீறல்களைச் சகித்துக் கொண்ட அல்லது அதில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கான சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன.
  • அல் சஹாபாப், அல்குவைதா, போகோ ஹராம், ஹயத் தாஹ்ரின் அல்-ஷாம், ஹவுதீஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ்-கிரேட்டர் சஹாரா, ஐஎஸ்ஐஎஸ் மேற்கு ஆப்பிரிக்கா, ஜமாத் நஸர் அல்-இஸ்லாம் வால் முஸ்லீம்ன் மற்றும் தலிபான் ஆகியவை “குறிப்பிட்ட அளவில் கவலை கொண்ட நிறுவனங்களாக” வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்