TNPSC Thervupettagam

சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை (IRF) 2019

June 13 , 2020 1535 days 661 0
  • சமீபத்தில், அமெரிக்க உள் துறையானது இந்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது உலகம் முழுவதும் மதச் சுதந்திரத்தின் நிலை குறித்து ஆய்வு செய்கின்றது.
  • IRF (International Religious Freedom) அறிக்கையானது மதச் சுதந்திரத்தின் நேர்மறை வளர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உதாரணங்கள் குறித்து நாடுகளைப் பட்டியல் படுத்துகின்றது.
  • நிகரகுவா, நைஜீரியா, சீனா ஆகியவை எதிர்மறை உதாரண நாடுகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் மதம் சார்ந்த சுதந்திரத்தின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் காட்டுவதற்காக இந்தியாவிற்கான ஓர் அறிக்கை என்ற அறிக்கையை இது வெளியிட்டுள்ளது.
  • இதற்கு முன்பு, சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் ஒரு  அறிக்கையானது இந்தியாவின் மதச் சுதந்திரத்தை “கவனத்தில் கொள்ள வேண்டிய நாடு” என்ற பிரிவில் மிகக் குறைந்த நிலையைக் கொண்டுள்ள ஒரு தரநிலைக்குக் கீழிறக்கியிருந்தது.
  • இது நாட்டில் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விவகாரங்கள் குறித்து, அதாவது ஜம்மு காஷ்மீரின் நிலை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவை குறித்து எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்