2019 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் தினத்திற்கான கருப்பொருள், “இளைஞர்கள் மனித உரிமைகளுக்காக போராடுகின்றார்கள்” என்பதாகும்.
#StandUp4HumanRights என்ற ஒரு பிரச்சாரமானது மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தினால் (Office of the High Commissioner for Human Rights - OHCHR) தொடங்கப் பட்டுள்ளது.
இத்தினமானது 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையமானது (United Nations Human Rights Council - UNHRC) 2006 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையமானது (National Human Rights Commission - NHRC) 1993 ஆம் ஆண்டில் புது தில்லியில் நிறுவப் பட்டுள்ளது.