ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதியன்று, இந்த நாளை நிறுவுவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
மனிதகுலத்தின் விண்வெளி பயண சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் நினைவு கூரப்படுகிறது.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த யூரி ககாரின் என்பவர் விண்வெளியில் பூமியைச் சுற்றி வந்த முதல் மனிதர் என்ற பெருமையினைப் பெற்றார்.
பின்னர், 1969 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் நபர் என்ற பெருமையினைப் பெற்றார்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல்' என்பதாகும்.