பெண் கல்விக்காகப் பணியாற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆர்வலரான மலாலா யூசப்சாய் என்பவரை கௌரவிப்பதற்காக ஜூலை 12 ஆம் தேதியை சர்வதேச மலாலா தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
பெண் கல்வியின் மீதான மலாலாவின் நிலைப்பாட்டின் காரணமாக 2012 ஆம் ஆண்டில் தலிபான்கள் இவரைச் சுட்டனர்.
இவர் அதிலிருந்து மீண்டு உயிர் பிழைத்து, தற்பொழுது பெண் கல்விக்கான சர்வதேசத் தூதுவராக உள்ளார்.
2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இளம் வயது வெற்றியாளர் இவராவார். அப்போது இவருடைய வயது 17.
அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த குழந்தை உரிமைகள் நல ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி என்பவருடன் இவர் பகிர்ந்து கொண்டார்.
இவர் 2013 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று பெண் கல்விக்காக ஐ.நா.வில் தனது புகழ்பெற்ற சிறப்பு உரையை நிகழ்த்தினார்.