TNPSC Thervupettagam

சர்வதேச மலைகள் தினம் – டிசம்பர் 11

December 13 , 2017 2569 days 1758 0
  • 2003 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 11ஆம் தேதி சர்வதேச மலைகள் தினம் ஐ.நா.பொது அவையில் கொண்டாடப்படுகின்றது.
  • மனித நல வாழ்வில் மலைகள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், அவற்றினால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மலைகளின் மேம்பாட்டில் உள்ள இடர்களை முன்னிலைப் படுத்திக் காட்டுவதற்கும், உலகம் முழுவதும் மலைவாழ் மக்களிடையேயும், சுற்றுச்சூழல் பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர ஆக்கப்பூர்வ கூட்டிணைவை ஏற்படுத்துவதற்கும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச மலைகள் தினத்தின் கருத்துரு “அழுத்தத்தில் மலைகள், பருவநிலை பட்டினி” (Mountain under Pressure: climate, hunger, migration) ஆகும் .
  • இந்த வருடம் சர்வதேச மலைகள் தினத்தின் கருத்துரு இந்த ஆண்டு டிசம்பர் 11 முதல் 13 வரை இத்தாலியின் ரோம் நகரிலுள்ள உலக உணவு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறும் (FAO – Food and Agriculture organisation) மலைகள் கூட்டிணைவின் உலக மாநாட்டோடு இணைக்கப்பட்டு அதன் மீது மாநாட்டு கருத்தரங்கு நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்