இந்தத் தினமானது 2003 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மலைகளில் வாழும் மக்கள், சூழல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் “இளைஞர்களுக்காக மலைகளின் முக்கியத்துவம்” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2002 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகளின் சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப் படி, உலக மக்கள் தொகையில் 15 சதவிகித மக்கள் மலைகளில் வாழ்கின்றனர். உலகில் உள்ள மொத்த விலங்குகள் மற்றும் தாவரங்களில் கால் பகுதி இனங்கள் மலைகளில் வாழ்கின்றன என்று இந்த அமைப்பு கூறுகின்றது.