ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மலை தினத்தின் கருத்துருவானது “#Mountains Matter” என்பதாகும்.
பல்லுயிர்ப் பெருக்கத்தில் மலைகளின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் (FAO - The Food and Agriculture Organization) இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இத்தினத்தைக் கொண்டாடுவதற்காக போலந்தின் கோட்டாவைஸில் நடைபெற்று வரும் UNFCCCயின் (United Nations Framework Convention on Climate Change) உறுப்பினர் நாடுகள் சந்திப்பின் ஒரு பகுதியாக (COP24) “மலைகளைச் சார்ந்திருத்தல்: பாதிக்கப்படக்கூடிய சிகரங்கள் மற்றும் மக்கள்“ என்ற நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.