ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மே 24 ஆம் தேதியை சர்வதேச மார்கோர் (திருகு கொம்பு காட்டு ஆடு) தினமாக அறிவித்தது என்பதோடு அது 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொண்டாடப் பட்டது.
மார்க்கோர் (காப்ரா ஃபால்கோனேரி) என்பது மத்திய மற்றும் தெற்காசியாவின் மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மரபார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இனமாகும்.
ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த உயிர் இனமாக" மார்க்கோர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.