சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் 2019 – டிசம்பர் 03
December 5 , 2019 1820 days 505 0
இது மாற்றுத் திறனாளிகளை நோக்கிய மக்களின் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் அவர்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படும் ஒரு விழிப்புணர்வு தினமாகும்.
இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. அமைப்பால் ஊக்கப்படுத்தப் பட்டு வருகின்றது.
2019 ஆம் ஆண்டு இத்தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பையும் அவர்களின் தலைமையையும் ஊக்குவித்தல்: 2030 ஆம் ஆண்டு வளர்ச்சி செயல்முறை மீது நடவடிக்கை எடுப்பது” என்பதாகும்.
அகில இந்திய வானொலியின் நாக்பூர் நிலையமானது ஒரு தனித்துவமான முறையில் இந்த நாளைக் கொண்டாடியது.
பண்பலைத் தலைப்புச் செய்திகள் பிரெயிலியில் தயாரிக்கப்பட்டு, அவை பார்வைக் குறைபாடுள்ள ஒரு பள்ளி ஆசிரியரான ரகுவர் குர்மியால் வாசிக்கப்பட்டன.