TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - செப்டம்பர் 30

September 30 , 2023 424 days 184 0
  • இந்தத் தினமானது மொழியியல் மற்றும் கலாச்சாரப் பிளவுகளை இணைப்பதில் மொழி பெயர்ப்பாளர்களின் விலைமதிப்பற்றப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவியக் கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • செப்டம்பர் 30 ஆம் தேதியன்று புனித ஜெரோம் அவர்களின் நினைவு நாள் ஆகும்.
  • புனித ஜெரோம் அவர்கள், வேதாகமத்தின் (பைபிளின்) பெரும்பகுதியை அதன் அசல் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து இலத்தீன் மொழியில் மொழிப்பெயர்த்தப் பணியில் புகழ் பெற்றவர் ஆவார்.
  • அவர் மொழிபெயர்ப்பாளர்களின் புரவலர் என்று அறியப்படுகிறார்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மொழிபெயர்ப்பு ஆனது மனித குலத்தின் பன்முகங்களை வெளிப்படுத்துகிறது’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்