தினசரி வாழ்வில் யோகாவின் நன்மைகள் குறித்து உளகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று சர்வதேச யோகா தினமானது கொண்டாடப்படுகின்றது.
இந்தியப் பிரதமர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் மற்ற பங்கேற்பாளர்களுடன் யோகாப் பயிற்சியை மேற்கொண்டார்.
5-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளானது “காலநிலை நடவடிக்கைகள்” என்பதாகும்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ஐ.நா. பொதுச் சபையானது ஜுன் 21ஆம் நாள் சர்வதேச அல்லது உலக யோகா தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.