உலகப் பிரபலமான, வருடாந்திர ஒரு வார கால 29-வது சர்வதேச யோகா திருவிழாவை உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதனில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தரா சிங் ராவத் தொடங்கி வைத்துள்ளார்.
1999-ஆம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் யோகா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மிகவும் அதிக எண்ணிக்கையில் பங்கெடுப்பாளர்கள் பங்கு பெற்ற 2010ஆம் ஆண்டின் யோகா திருவிழாவானது மிகவும் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.