TNPSC Thervupettagam

சர்வதேச லெவல் கிராசிங் பற்றிய விழிப்புணர்வு தினம் – ஜுன் 10

June 14 , 2021 1172 days 395 0
  • சர்வதேச இரயில்வே ஒன்றிய அமைப்பினால் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு சர்வதேச லெவல் கிராசிங் (இரயில்பாதை – சாலை சந்திப்பு) பற்றிய விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு, கவனச் சிதறல்(distraction) என்பதாகும்.
  • இதன் முழக்கம் “கவனச் சிதறல் உயிரைப் பறிக்கும்” (Distraction kills) என்பதாகும்.
  • இந்தியாவின் தெற்குமத்திய ரயில்வேயானது லெவல் கிராசிங் உள்ள பகுதிகளில் பொது மக்களுக்காக சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இத்தினத்தினைக் கடைபிடித்தது.
  • தெற்கு மத்திய இரயில்வே மண்டலமானது இந்திய இரயில்வே அமைப்பின் 18 மண்டலங்களுள் ஒன்றாகும்.
  • தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் இரயில்சேவைகள் தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் வரம்பிற்கு உட்பட்டவையாகும்.
  • தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் தற்போதைய தலைமையகம் செகந்திராபாத் இரயில்வே நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்