TNPSC Thervupettagam

சர்வதேச வனங்கள் (காடுகள்) தினம் – மார்ச் 21

March 22 , 2021 1257 days 439 0
  • இந்நாள் முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
  • இத்தினத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “காடுகளின் மறுசீரமைப்பு : மீட்சி மற்றும் நல்வாழ்விற்கான பாதை” என்பதாகும்.
  • இந்நாளினைக் கடைபிடிக்க தொடங்கிய அமைப்புகள், காடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியன ஆகும்.
  • இந்த வருடக் கருத்துரு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் மீள்விற்கான பத்தாண்டுடன் (2021-2030) பொருந்திப் போகின்றது. இது உலகமெங்கிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதனை மீளச் செய்வதற்குமான ஒரு அழைப்பு ஆகும்.
  • காடுகளுக்கான சர்வதேச வருடம் 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்