ஐ.நா பொது அவை 21 டிசம்பர் 2012ல் ஒரு தீர்மானத்தை (A / RES /67 / 200) ஏற்றது. இத்தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி சர்வதேச வன தினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவித்தது.
ஒவ்வொரு ஆண்டிற்கான கருத்துரு வன கூட்டுப்பங்களிப்பு மூலம் (Collaborative Partnership on Forests) தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தாண்டுக்கான கருத்துரு “வனங்கள் மற்றும் நீடித்த நகரங்கள்”.
இந்த உலகளாவிய வனக் கொண்டாட்டம், அனைத்து வகையான காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது.
மேலும் இவற்றின் நிலைத்தன்மை மற்றும் இவை நம்மை பாதுகாக்கும் விதம் பற்றிய வழிகளைக் கொண்டாடவும் இத்தினம் ஒரு தளத்தை வழங்குகிறது.