TNPSC Thervupettagam

சர்வதேச வரி ஒத்துழைப்புக் கட்டமைப்பு

December 9 , 2022 591 days 278 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் அரசுகளுக்கிடையேயான செயல்முறையின் அடிப்படையில் ஒரு சர்வதேச வரி ஒத்துழைப்புக் கட்டமைப்பை அல்லது செயற் கருவியை உருவாக்குவதற்கான தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் பொது சபை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.
  • 54 ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் நைஜீரியா இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்தது.
  • உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வரி விதிப்பு முறைகளை ஒழுங்குபடுத்தும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 60 ஆண்டுகாலப் பணிக்கு இது முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.
  • இதே போன்ற ஒரு கட்டமைப்பைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்மொழிந்துள்ளது.
  • இந்தக் கட்டமைப்பு ஆனது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் அறிமுகப் படுத்தப் பட்ட "இரு பிரிவு தீர்வு", ஆனது எண்ணிமப் பொருளாதாரத்தில் நிலவும் வரி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்