TNPSC Thervupettagam
June 29 , 2018 2243 days 703 0
  • யூனிலீவர் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியான (CEO-Chief Executive Officer) பவுல் போல் மேன் சுனில் பாரதி மிட்டலிற்கு அடுத்து சர்வதேச வர்த்தகச் சங்கத்தின் (ICC-International Chamber of Commerce) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பாரதி எண்டர்பிரைசின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரதி மிட்டல், தனக்கான இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ICC ன் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளார்.
  • ICC யின் கவுரவமிக்க தலைவர் பொறுப்பை 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி மிட்டல் ஏற்பார்.
  • மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் CEO மற்றும் தலைவரான அஜய்பங்கா ICC இன் அடுத்த முதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ICC

  • மூலதனங்களின் தடையற்ற நகர்வு, வணிகப் பொருட்களுக்கான திறந்த சந்தைகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் உலக வணிகத்திற்கு சேவையாற்றுவதற்காக 1919ஆம் ஆண்டு ICC நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பின் சர்வதேசத் தலைமையகம் பாரீசில் நிறுவப்பட்டது. ICCன் வணிகப் பிரச்சனைகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் 1923ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • ICC அமைப்பானது ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக மன்றத்தில் பொது ஆலோசக அந்தஸ்தை பெற்ற முதல் அமைப்பாகும். மேலும் ஐ.நா.வின் கூர்நோக்குநர் அந்தஸ்து பெற்ற முதல் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்