TNPSC Thervupettagam

சர்வதேச வறட்சி நெகிழ்திறன் கூட்டணி

November 17 , 2022 613 days 270 0
  • சர்வதேச வறட்சி நெகிழ்திறன் கூட்டணியானது (IDRA) UNFCC அமைப்பின் COP27 மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஸ்பெயின் மற்றும் செனகல் ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச வறட்சி நெகிழ் திறன் கூட்டணியினை அறிமுகப் படுத்தின.
  • இது எதிர்காலத்தில் ஏற்பட உள்ள வறட்சி நிலையினை எதிர்கொள்வதற்கான தயார் நிலையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கூட்டணியில் 30 நாடுகள் மற்றும் 20 அமைப்புகள் உள்ளன.
  • இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் ஸ்பெயின் நாடானது சர்வதேச வறட்சி நெகிழ்திறன் கூட்டணி குறித்து முதலில் அறிவித்தது.
  • சமீபத்திய வறட்சி நிகழ்வுகள் என்பவை அளவில் அடிக்கடி ஏற்படுபவையாகவும் கடுமையானவையாகவும் உள்ளன.
  • வறட்சி ஏற்படும் வீதமானது 2000 ஆம் ஆண்டு முதல் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் 55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப் படச் செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்