சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அல்லது ஊதா தினம் - மார்ச் 26
March 31 , 2023 609 days 202 0
இந்தத் தினமானது வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும், இந்த நரம்பியல் சார்ந்த நோய் குறித்த தவறான தகவல் பரவலைக் குறைக்கவும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
வலிப்பு நோய் என்பது ஒரு நாள்பட்ட மூளைக் கோளாறு ஆகும்.
இது மின் தூண்டுதல்களைக் கடத்தும் மூளையின் திறனைப் பாதிப்பதனால் வலிப்புத் தாக்கங்களுக்கு வழி வகுக்கின்றது.
இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று கனடாவைச் சேர்ந்த காசிடி மேகன் என்பவரால் முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
50 மில்லியன் அளவிலான மக்களைப் பாதிக்கும் இந்த நோய் உலகின் குறிப்பிடத்தக்க நோய்ப் பாதிப்புகளில் ஒன்றாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 5 மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
இந்தியாவில், 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் (20%) வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.