இது ஆண்டிற்கு இரு முறை, அதாவது செப்டம்பர் 26 மற்றும் மே 2 ஆகிய தினங்களில் அனுசரிக்கப் படுகின்றது.
இது சர்வதேச வானியல் ஒன்றியத்தினால் (IAU - International Astronomical Union) ஒருங்கிணைக்கப் படுகின்றது.
IAU ஆனது 1919 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டதாகும்.
இந்தியா IAU அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இதன் தலைமையகம் பிரான்சில் அமைந்துள்ளது.
சர்வதேச வானியல் ஆண்டானது 2009 ஆம் ஆண்டு அனுசரிக்கப் பட்டது.
இது கலிலியோவின் கண்டுபிடிப்புகளின் 400வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்காகவும் 17ம் நூற்றாண்டில் கெப்ளரின் கண்டுபிடிப்புகளை அனுசரிப்பதற்காகவும் வேண்டி 2009 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
1609 ஆம் ஆண்டில், விண்வெளி குறித்த பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் கலிலியோ முதன்முறையாக நிலவில் உள்ள பள்ளங்கள் மற்றும் மலைகளைக் கண்டறிந்தார்.