சர்வதேச விண்வெளி நிலையத்தினை அழிப்பதற்கு ஒப்பந்தம்
July 3 , 2024 144 days 226 0
சர்வதேச விண்வெளி நிலையத்தினை (ISS) அழித்து அதைப் பூமியில் பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு 843 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வடிவமைத்தச் சுற்றுப்பாதை விலக்க வாகனம் ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டு சுழற்சி முடிவடையும் போது, அதனை அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்ற வேண்டி பயன்படும்.
ஒரு கால்பந்து மைதான அளவிலான இந்த விண்வெளி நிலையம் ஆனது, புவியின் வளிமண்டலத்தில் சுமார் 17000 mph (27500 km/h) வேகத்தில் பயணித்த பிறகு கடலில் விழச் செய்யப் படும்.
சர்வதேச விண்வெளி நிலையமானது, முதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு, மற்றும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் உள்ள விண்வெளி நிறுவனங்களால் இயக்கப்படுகிறது.