TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமை

October 6 , 2022 655 days 329 0
  • சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி என்பவர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் புதிய தலைமை விண்வெளி வீராங்கனையாகப் பொறுப்பேற்ற முதல் ஐரோப்பியப் பெண் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • விண்வெளி நிலையத்தின் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிடுவது இவருடையப் பொறுப்பாகும்.
  • இவர் இத்தாலிய விமானப் படையின் முன்னாள் போர் விமானி ஆவார்.
  • 2000 ஆம் ஆண்டில் இந்தப் பொறுப்பு உருவாக்கப்பட்டது முதல் இந்தப் பொறுப்பினை வகிக்க உள்ள முதலாவது அமெரிக்கர் அல்லாத பெண் மற்றும் ஐந்தாவது பெண்மணி சமந்தா ஆவார்.
  • 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 199 நாட்கள் சுற்றுப்பாதையில் பயணித்தப் பிறகு, அதிக நேரம் விண்வெளியில் தங்கியப் பெண்மணி என்ற பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்