இந்த தசாப்தத்தின் இறுதி வரையில் ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு அங்கமாக இருக்கும் என நாசா அமைப்பின் நிர்வாகி பில் நெல்சல் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையமானது புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையிலுள்ள ஒரு மாதிரி விண்வெளி நிலையமாகும்.
இது 5 பங்கேற்பு விண்வெளி நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு பன்னாட்டு கூட்டிணைவாகும். அவை
நாசா (அமெரிக்கா),
ராஸ்கோஸ்மாஸ் (ரஷ்யா).
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ஐரோப்பா)
கனடா விண்வெளி நிறுவனம் (கனடா) மற்றும்
ஜப்பான் விண்வெளி நிறுவனம் (ஜப்பான்)
குறிப்பு
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2024 ஆம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி நிலையத்தின் அங்கமாக செயல்படும் என அறிவித்திருந்தது.