உலகளவில் விதவைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக வாதிடுவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
விதவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் முக்கிய அவசியத்தை நினைவூட்டுவதாக இந்த நாள் விளங்குகிறது.
இந்த நாள் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு 'பாலினச் சமத்துவத்திற்கானப் புதுமை மற்றும் தொழில்நுட்பம்' என்பதாகும்.