TNPSC Thervupettagam

சர்வதேச விமானப் போக்குவரத்து தினம் - டிசம்பர் 07

December 10 , 2018 2119 days 660 0
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 07 அன்று சர்வதேச விமானப் போக்குவரத்து தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இதன் நோக்கம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான சர்வதேச விமானப் போக்குவரத்தின் கருத்துருவானது, “எந்தவொரு நாடும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்றுதல்” என்பதாகும்.
  • சர்வதேச விமானப் போக்குவரத்து தினமானது 1994 ஆம் ஆண்டில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் 50-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்டது.
  • 1944 ஆம் ஆண்டில் 54 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அமெரிக்காவின் சிகாகோவில் கூடி சர்வதேச விமானப் போக்குவரத்து மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது “சிகாகோ ஒப்பந்தம்” என்றறியப்படுகிறது.
  • இது 1996 ஆம் ஆண்டில் ஐ.நா.வினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்