TNPSC Thervupettagam

சர்வதேச வெப்பாற்றல் சோதனை உலை (ITER/ International Thermonuclear Experimental Reactor)

August 3 , 2020 1486 days 777 0
  • சர்வதேச வெப்பாற்றல் சோதனை உலையானது தனது 1 ஆண்டு கால கூடுகை நிலைக்குள் நுழைந்துள்ளது.
  • இது ஒரு மிகப்பெரிய சர்வதேச அணுக் கரு இணைவு ஆராய்ச்சி மற்றும் பொறியியல்சார் திட்டமாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய காந்த வரையறை கொண்ட பிளாஸ்மா இயற்பியல் சோதனையாக இருக்கும்.
  • இது ஒரு சோதனை ரீதியிலான டோகாமாக் (tokamak) என்ற ஒரு அணுக்கரு இணைவு உலையாகும். இது தெற்கு பிரான்சில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இது அமைதிப் பயன்பாடுகளுக்காக வேண்டி அணுக்கரு இணைவின் அறிவியல்சார் மற்றும் தொழில்நுட்பச் செயலாக்க முறையை மேற்கொள்ள இருக்கின்றது.
  • இது தூய்மையான, குறைந்த செலவு கொண்ட மற்றும் அதிக அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யும் முதலாவது இணைவு சாதனமாக இருக்கும்.
  • இந்தத் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய 7 உறுப்பு நாடுகளில் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றது.
  • அணுக்கரு இணைவானது சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் ஆற்றல் மூலமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்