உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சர்வதேச வெப்ப மண்டலங்களின் தினம் (International Day of Tropics) அனுசரிக்கப் படுகின்றது.
2014 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கீயினால் தொடங்கப்பட்ட “வெப்பமண்டலங்களின் நிலைகள் மீதான அறிக்கையின்” நினைவைக் குறிப்பதற்காக இத்தினம் பறைசாற்றப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இது வெப்பமண்டலப் பகுதிகளினால் எதிர் கொள்ளப்படும் பருவநிலை குறித்த சவால்கள் மற்றும் உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.