இது வெப்ப மண்டலத்தின் அசாதாரண பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதோடு, வெப்ப மண்டல நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டில், மியான்மரின் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி அவர்களால் தொடங்கப்பட்ட முதல் ‘வெப்ப மண்டல அறிக்கையை’ நினைவு கூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப மண்டலம் என்பது கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி என தோராயமாக வரையறுக்கப்படுகின்ற பூமியின் ஒரு பகுதியாகும்.
உலகின் சதுப்புநிலக் காடுகளில் ஏறக்குறைய 95% பரப்பளவு மற்றும் 99% சதுப்புநிலக் காடுகளை வெப்பமண்டலப் பகுதி கொண்டுள்ளது.
உலகின் புதுப்பிக்கத்தக்க நீர் மூலங்களில் பாதிக்கு மேலான பகுதிகள் (54%) ஆனது வெப்ப மண்டலங்களாக உள்ளன.