ஜூன் 13 அன்று உலக அளவில் சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது வெளிறல் குறித்த தொன்மத்தை அகற்றுவதற்கும், அது குறித்த களங்கத்தை குறைப்பதற்கும், சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வெளிறலுடன் வாழும் மக்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்கும் அனுசரிக்கப்படுகின்றது.
இது வெளிறலுடன் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து ஊக்கப் படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் தீர்மானத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “இன்னும் உறுதியுடன் எழுந்து நில்” என்பதாகும்.