சர்வதேச வெளிறல் (Albinism) விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
June 15 , 2018 2354 days 967 0
உலகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
2018ம் ஆண்டிற்கான சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு - "உலகிற்கு நமது ஒளியை ஜொலிக்கச் செய்வது" என்பதாகும்.
வெளிறல் குறைபாட்டுடன் கூடிய மக்களின் உரிமைகள் பாதுகாத்திட சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, நீதி மற்றும் சிறந்த சுகாதாரம் ஆகிய விவகாரங்களில் சமமான வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதி செய்திடவும் முயற்சி மேற்கொண்டிட இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டு ஐ.நா. பொது அவை ஜூன் 13ம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக 2015ம் ஆண்டு முதற்கொண்டு அனுசரிக்க தீர்மானித்தது.