இந்திய கடலோரக் காவல் படையினர் சர் கிரீக் பகுதியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இரண்டு புதிய மிதவை ஊர்திகளை (Hovercrafts) அனுப்பியுள்ளனர்.
இது கண்காணிப்புத் திறன்களை அதிகரிக்கவும் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவுதலைத் தடுக்கவும் பயன்படும்.
ஒரு மிதக்கும் வாகனம் என்பது நிலம், நீர், சேறு, பனிக்கட்டி மற்றும் மற்ற பரப்புகளில் 50-60 கிமீ/மணி வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்ட ஒரு ஈரிட வாகனமாகும்.