TNPSC Thervupettagam

சர் சையத் அகமது கான் பிறந்தநாள்

October 27 , 2023 249 days 248 0
  • சர் சையது அகமது கான், சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதிலும், இஸ்லாமியர்களிடையே நவீனக் கல்வியின் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்வதிலும் புகழ் பெற்றவர் ஆவார்.
  • அவர் 1864 ஆம் ஆண்டில் காசிபூரில் அறிவியல் சங்கத்தை நிறுவினார்.
  • அவர் இஸ்லாமியர்களிடையே நவீனச் சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக 1870 ஆம் ஆண்டில் தஹ்சிப்-உல்-அக்லாக் என்ற புகழ்பெற்ற மாத இதழினையும்  தொடங்கினார்.
  • 1875 ஆம் ஆண்டில் அவர் ஏழு மாணவர்களைக் கொண்டு, பின்னர் அலிகார் இஸ்லாமிய பல்கலைக் கழகம் என்று அழைக்கப்படுகின்ற மதரஸா-துல்-உலூம் எனப்படும் (AMU) கல்வி நிறுவனத்திற்கான அடித்தளத்தினை அமைத்தார்.
  • 1877 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதியன்று முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியானது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யப்பட்டுப் பல்கலைக்கழக அந்தஸ்தினை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்