TNPSC Thervupettagam

சலுகை நிதித் திட்டம்

August 2 , 2018 2308 days 733 0
  • மத்திய அமைச்சரவை சலுகை நிதித் திட்டத்தினை 2018-2023 ஆகிய 5 வருடங்களுக்கு நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது. இது சலுகை நிதித் திட்டத்தின் முதலாவது நீட்டிப்பாகும். (CFS-Concessional Financing Scheme).
  • வெளிநாடுகளில் பயன்படத்தக்க வகையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் ஏலத்தில் எடுப்பதை ஆதரிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது.
  • நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய நிறுவனமும் இத்திட்டத்தில் பங்குபெற்று பயனடைந்திட இத்திட்டம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது.
  • சலுகை நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுக்கும். பின்னர், வெளியுறவு அமைச்சகம் இதை பொருளாதார விவகாரங்களுக்கான துறைக்கு அனுப்பி வைக்கும்.
  • முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான திட்டங்கள் இச்சலுகை நிதியைப் பெற்றிட அவை வகை வகையாகப் பிரிக்கப்பட்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் தலைமையிலான குழுவால் அதற்கான முடிவு எடுக்கப்படும்.
  • இக்குழுவில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உறுப்பினராக இருப்பார்.
  • தற்பொழுது இத்திட்டம் எக்ஸிம் (EXIM Bank) வங்கி மூலம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வங்கி சலுகை நிதி அளிப்பதற்காக சந்தையில் இருந்து நிதியை உருவாக்கும்.
  • மத்திய அரசாங்கம் எதிர் உத்தரவாதம் மற்றும் 2 சதவீத வட்டி சமநிலை ஆகிய உதவிகளை எக்ஸிம் வங்கிக்கு அளிக்கும்.
  • LIBOR (The London Inter-bank Offered Rate) 6 மாதத்திற்கான சராசரி + 100 புள்ளிகளுக்கு மேல் இல்லாமல் கடன் உதவியை எக்ஸிம் வங்கி (EXIM BANK) நீட்டிக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆனது வெளிநாட்டு அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்