TNPSC Thervupettagam

சல்லகேர் - மனித விண்வெளி விமான உள்கட்டமைப்பு மையம்

January 7 , 2020 1658 days 688 0
  • கர்நாடகாவின் சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லகேரில் மனித விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு மையத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • இந்த மையமானது மூன்று ஆண்டுகளில் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த மையமானது தேசிய நெடுஞ்சாலை – 4ல் (பெங்களூரு – புனே) அமைக்கப்பட உள்ளது.
  • தற்போது, இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தில் கலந்து கொள்ளும் விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுகின்றனர்.
  • இந்த மையமானது ரஷ்யாவினால் வழங்கப்பட்ட அனைத்து வசதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வருவதையும் இந்தியாவிற்குள் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ககன்யான் திட்டத்தில் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்