சுகாதார மற்றம் குடும்ப நலத்துறை அமைச்சகமானது (MOHFW - Union Ministry of Health and Family Welfare) காசநோய் (TB) நோய் கண்டறிதலுக்கான சளி மாதிரியை போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்கான முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போக்குவரத்து புது டெல்லியின் காரவால் நகரின் அஞ்சல் துறையின் சேவையை பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.
இது TB நோயாளிகளின் பொருத்தமான மேலாண்மைக்கும் நோய் பரவுதலை குறைப்பதற்கும் உதவும்.
மேலும் சுகாதார அமைச்சகமானது ‘நிக்சய் பதிப்பு0’ என்ற பயனர் இடைமுகம் மற்றும் தரவு கட்டமைப்புகளுடன் கூடிய இணையதள அடிப்படையிலான செயலியைத் தொடங்கியுள்ளது.
நிக்சய் ஆனது திருத்தப்பட்ட தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் (RNTP - Revised National Tuberculosis Programme) TB நோயாளிகளை திறம்பட கண்காணிப்பதற்கான வலை அடிப்படையிலான ஒரு தீர்வாகும்.
இது MOHFW யின் மத்திய TB பிரிவுடன் (CTB - Central TB Division) இணைந்து தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டு மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.