சவுதி அரேபியாவின் அதிகாரம் வாய்ந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MbS என அழைக்கப்படும் இந்தப் பட்டத்து இளவரசர், பாதுகாப்பு அமைச்சராக இருந்து பதவி உயர்வு பெற்று சவுதி அரேபியாவின் தற்கால ஆட்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
சவூதி அரேபியா உலகிலேயே அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாகத் திகழ்வதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஒரு முக்கிய நட்பு நாடாகவும் இது திகழ்கிறது.